Govt Bus Accident : கழன்று ஓடிய சக்கரம்..பதறிய பயணிகள்!அரசு பேருந்தின் அவல நிலை!

Continues below advertisement

 

கழன்று ஓடிய சக்கரம்..பதறிய பயணிகள்!அரசு பேருந்தின் அவல நிலை!

பழனி அருகே ஓடும் அரசு பேருந்தின் முன் சக்கரம் கழன்று சாக்கடையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை  30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு  அரசு நகர பேருந்து புறப்பட்ட. வேப்பன்வலசு அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் இடதுபுற  முன்சக்கரம் கழன்று சென்று பெரிய சாக்கடையில் விழுந்தது. ஓடும் பேருந்தின் சக்கரம் கழன்றதால் பயணிகள் பதறிய நிலையில் கூச்சலிட்டுள்ளனர்.


இந்நிலையில் ஓட்டுநர் தனது சாமர்த்தியத்தால் பேருந்தை கவனமாக நிறுத்தியதால் பயணிகளின் பெரும் சேதமின்றி உயிர் தப்பினர். எனினும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்டு பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பழனி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன் சக்கர கழன்றதில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram