EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?
ஓபிஎஸ் –இபிஎஸ் இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவரும் நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ் நாடு வரும் பிரதமர் மோடிய தனித்தனியாக சந்திக்க இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் appointment கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசினார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக-வை எப்படியாவது இணைத்து விட வேண்டும் என பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இபிஎஸ் கூட்டணிக்கு இறங்கி வந்தாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் சேரவே மாட்டேன் என விடாப்பிடியாக இருக்கிறார். டெல்லி சென்று திரும்பிய பிறகு கூட தனது கருத்தில் உறுதியாக இருந்தார் இபிஎஸ். 2 தரப்புக்கும் இடையிலான வார்த்தை போரும் முடிந்தபாடில்லை
அதிமுகவை ஒன்றிணைக்க அமைச்சர் அமித்ஷா ஆரம்பம் முதலே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதற்கு இபிஎஸ் வளைந்து கொடுக்காததால் குறைந்தபட்சம் ஒரே கூட்டணியிலாவது இருக்க வேண்டும் என பாஜக இறங்கி வந்துள்ளதாக சொல்கின்றனர். ஏற்கனவே ஓபிஎஸ்-ம் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்த கூட்டணியை உடைக்காமல் அதிமுகவை உள்ளே கொண்டு வருவதற்காக காய்களை நகர்த்தி வருகிறது பாஜக.
அதிமுக கூட்டணியை சாத்தியப்படுத்துவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தூக்கிவிட்டு கூட நயினாரை அந்த இடத்திற்கு கொண்டு வரும் முடிவுக்கு பாஜக தலைமை வந்துவிட்டதாக சொல்கின்றனர். அதிமுகவுக்காக அண்ணாமலையை கூட நீக்கிவிட்டோம், ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்க ஒத்துக் கொள்ளுங்கள் என்று இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த ப்ளான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் அதிமுக இப்படி பிரிந்து கிடந்தால் அது திமுக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு நாமே உதவியதை போல் ஆகிவிடும். அதற்கு இடம் கொடுக்க கூடாது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் மீண்டும் இணைவது தான் நம் கூட்டணிக்கு வலுவை சேர்க்கும் என்று டெல்லி பாஜக தலைமை இபிஎஸ்-யிடம் பேசிவருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரம் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் நாடு வருகிறார். இதனிடையே அதிமுக பொதுச்செயலாலர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மோடியை தனித்தனியாக சந்தித்து பேச appointment கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் பேது இவர்கள் இருவரையும் இணைக்கும் பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் தமிழ்நாடு விசிட்டிற்கு பிறகு அதிமுக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் வரவிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.