Encounter Velladurai Suspended : வெள்ளதுரை சஸ்பெண்ட்! சாட்டையை சுழற்றும் அமுதா IAS.. காரணம் என்ன?

Continues below advertisement

எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் வெள்ளத்துரை இன்னும் சில நாட்களில் ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அனுமதியின்றி திருவண்ணாமலை மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளதும் பரபரப்பை கூட்டியுள்ளது.

அயோத்தி குப்பம் வீரமணி தொடங்கி சந்தன கடத்தல் வீரப்பன் வரை பல தாதாக்களை அடக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் எண்கவுண்டர் வெள்ளத்துரை. இதுவரை 13 எண்கவுண்டர்களில் இவருக்கு தொடர்புயைதாக சொல்லபடுகிறது, இந்நிலையில் அண்மையில் இவர் சென்னை புறநகரான காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார். 

 

அப்படி இருக்கையில் ஸ்டெர்ய்ட் பார்வர்டான அதிகாரியாக அறியப்படும் இவருக்கு ஓய்வு பெருவதற்கு சரியாக ஒருநாளுக்கு முன் சஸ்பெண்ஷன் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தின் குற்ற பதிவு அலுவலகத்தில் கூடுதல் எஸ்பியாக பணியாற்ற வந்த இவரை, திருவண்ணாமலை மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியேறவும் காவல்துறை தடைவிதித்துள்ளது.

 

இந்நிலையில் வெளிவரும் தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகிய அனைவருமே எண்கவுண்டர் வெள்ளதுரைக்கு ஓய்வு கொடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில், தமிழக உள்துரை சார்பில் வெள்ளதுரைக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு காரணம் என்ன என்று விசாரிக்கையில், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த கொக்கி குமாரின் லாக் அப் மரணத்தில் எண்கவுண்டர் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், அதன் விசாரனை நடைப்பெற்றுவருவதால், அது முடியும் வரை வெள்ளதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

கொக்கி குமாரின் வழக்கை பொருத்த அளவில் சிபி-சிஐடி விசாரணைக்கு அது மாற்றப்பட்டு, காவல் ஆய்வாளர் எஸ் கீதா தனது இறுதி அறிக்கையை 2023 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

 

அதில் 500 ரூபாயை திருடிய வழக்கில் கொக்கி குமாரை பிடிக்க முயன்ற போது, அவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து ஓடியதாகவும், அப்போது ஒரு குழுயில் விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், உடனே மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக சொன்னதாக அந்த ரிப்போர்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் அந்த வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரனை முடிவடையாததால், கூடுதல் எஸ்பி வெள்ளதுரைக்கு சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram