Durai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல் ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!

ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை என் அனுபவத்தில் புரிந்துகொண்டேன் என்று மநீம தலைவர் கமல் கூறிய நிலையில், உங்களுக்கு புரிந்தது 2026ல் வேறு ஒருவருக்கு புரியும் என்று விஜயை தாக்கியுள்ளார் நாதக சாட்டை துரைமுருகன்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய போது அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் வரவேற்பு தெரிவித்தார். தொடர்ந்து சில நாட்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் பின்னர், அண்ணாவது தம்பியாவது கொள்கை என்று வந்து விட்டால் அம்மா அப்பாவாக இருந்தாலும் எதிரி எதிரி தான் என்று விமர்சனம் செய்தார். பெரியாரை கொள்கை தலைவராக அறிவித்ததோடு திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்று விஜய் பொதுக்கூட்டத்தியில் பேசியதில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். முன்னதாக நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் , “நான் தோற்றுப் போன அரசியல்வாதி என்பார்கள். என்னைப் பொறுத்தவரை என் தோல்விக்குக் காரணமாக நான் நினைப்பது, 20 ஆண்டுகளுக்கு முன்பே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது வரத் தவறினேன் என்பதுதான் எனக்குத் தோல்வி என நினைக்கிறேன். 

அப்படி வந்திருந்தால் நான் இன்று பேசுகிற வார்த்தைகளும் இடமும் வேறாக இருந்திருக்கும்.  ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்பதை என் அனுபவத்தில்  நான் புரிந்துகொண்டேன் ”என்று கூறினார். கமலின் இந்த பேச்சை மேற்கோள் காட்டி சாட்டை துரைமுருகன் , ”உங்களுக்கு புரிந்தது 2026ல் வேறு ஒருவருக்கு புரியும்” என்று கூறியுள்ளார். விஜயின் பெயரை குறிப்பிடாமல் அவர் இவ்வாறு கூறியுள்ள நிலையில் தவெக தொண்டர்கள் சாட்டை துரைமுருகனுக்கு , டெப்பாசிட் வாங்க முடியாத நீங்கள் எல்லாம் எங்களை விமர்சனம்செய்வது தான் காமெடி என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola