Drunk men bus issue : ”நான் விசிக தலைவர்! என்கிட்டயே டிக்கெட்டா?” மதுப்பிரியர் அட்ராசிட்டி

மதுபோதையில் பேருந்தில் ஏறிய நபர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தலைவர் என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா? என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணியில் இருந்து பெங்களூர் செல்லும் அரசு பேருந்து வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது மாதனூர் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு இளைஞர்கள் ஏறியுள்ளனர். பேருந்து சிறிது தூரம் சென்ற போது நடத்துனர்  அவர்களிடம் டிக்கெட் எடுக்க கேட்டபோது இளைஞர் ஓருவர் மது போதையில் இருந்ததால் நான் யார் தெரியுமா? விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் எனவும், என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததால் கடுப்பான பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் இளைஞர்களை ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு கிளம்பினர். இதேபோல் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நின்று செல்லும்  ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறைய பேர் மது அருந்திவிட்டு படுத்து கிடப்பதால் பெண்களும் மாணவர்களும் அச்சத்துடன் செல்லும் சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola