திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

Continues below advertisement

கிருஷ்ணகிரியில் திமுக நகராட்சி கவுன்சிலர் ஒருவர் கணினி மையத்தில் நுழைந்து அதன் உரிமையாளரை சாரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 32வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சீனிவாசன்.

இவர் எல்ஐசி அலுவலகம் எதிரே உள்ள அவ்வை நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அந்த பகுதியில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை கொட்டி வைத்திருந்தார்.

இந்த நிலையில் சிமெண்ட் சாலை பணிகள் முடிந்த பிறகும், மீதம் இருந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் அந்தப் பகுதியில் அப்படியே இருந்துள்ளது.

பின்னர் அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் அவரிடம் கேட்டு அந்த எம் சாண்ட் மற்றும் ஜல்லி கற்களை எடுத்துச் சென்று அவரவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு பள்ளமாக இருந்த பகுதிகளில் கொட்டித் தாங்களாகவே சமன் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அந்தப் பகுதிக்கு வந்த கவுன்சிலர் சீனிவாசன், அங்குள்ள கணினி மையத்திற்கு நுழைந்து அதன் உரிமையாளர் ஹரி பிரகாஷிடம், "யாரைக் கேட்டு எம் சாண்ட் மற்றும் ஜல்லிகர்களை பயன்படுத்தினாய்" வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது உரிமையாளரின் கன்னத்தில் கவுன்சிலர் அறைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து ஹரி பிரகாஷ் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவரது தந்தையும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சீனிவாசனின் ஆதரவாளர்கள் அவரையும் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் வீடியோ பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola