Dindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?

Continues below advertisement

திண்டுக்கல் அருகே ரவுடி  ஒருவர்  கொடூரமாக வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த முகமது இர்பான்இவர் மீது கொலை உள்ளிட்ட 20க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில் முகமது இர்பான் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டரில் திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதிக்கு வந்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். 

அப்போது முகமது இர்பான் உள்பட அவரது நண்பர்கள் 3 பேரையும் 2 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடிவந்து முகமது இர்பானின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதைப்பார்த்த இர்பானின் நண்பர் முகமது மீரான் அதிர்ச்சியில் அங்கிருந்து ஓடிவிட்டார். தொடர்ந்து முகமது இர்பானின் தலையை கொடூரமாக வெட்டி சிதைத்து படுகொலை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த இர்பானின் நண்பர் முகமது அப்துல்லா வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ம்ருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து முகமது இர்பானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் விட்டுச்சென்ற பட்டா கத்தி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட முகமது இர்பானும், முகமது அப்துல்லாவும் தி.மு.க. பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் 2-வது, 8-வது குற்றவாளிகள் என்பதும், இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 

எனவே பழிக்கு பழியாக இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முகமது அப்துல்லாவும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்திருப்பது திண்டுக்கல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram