Po Mallapuram Chairman: முதல்வர் உத்தரவை மீறி பதவியேற்ற சேர்மன்.. கையெழுத்திடாத உறுப்பினர்கள்

Continues below advertisement

Po Mallapuram Chairman: தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேருராட்சி திமுக கூட்டணியில் விசிகவிற்கு தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் திமுகவைச் சார்ந்த புஷ்பராஜ் மனைவி சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் விசிக சார்பில் போட்டியிட்ட சின்ன வேடி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் திமுக தலைவரின் அறிக்கைக்குப் பிறகு புஷ்பராஜ் மனைவி சாந்தியை ராஜினாமா செய்ய வேண்டுமென திமுகவினரும் வலியுறுத்தி வந்தனர். இதனை அடுத்து கடந்த 5 நாட்களாக புஷ்பராஜ் இடம் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் புஷ்பராஜ் பதவி விலக முடியாது, தன்னை கட்சி விட்டு வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram