Police Deepa | "25 வருசம் வளர்த்தவர்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்காதீங்க" பெண் ஆய்வாளர் பேச்சு
ஆண்களை 25 ஆண்டுகள் வளர்த்த அப்பா அம்மாவிடம் பேசக்கூடாது என சொல்லக்கூடாது என்று காவல் ஆய்வாளர் தீபா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூரில் உள்ள பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகை கடையில் உலக உணவு தினத்தையொட்டி ஜாய் ஆலுக்காஸ் அறக்கட்டளை சார்பில் கடலூரில் குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு அரசி, மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் 100-க்கும் மேற்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருப்பாப்புலியூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரன், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தீபா, பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தீபா பேசுகையில் நமக்கு கிடைக்காதது நம் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று படிக்க வைத்து வேலை வாங்கித் தருகிறீர்கள் ஆனால் அந்த பசங்க நம்மள கண்டிப்பா பார்க்க மாட்டாங்க... சொத்து இருந்தா எழுதி வைக்காதீங்க... மருமகள் துரத்தி விடுவார்கள்... புகுந்த வீட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், தனக்கு வந்த வழக்குகளின் அடிப்படையில் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.





















