
Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore
கடலூர் மஞ்சக்குப்பத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் ஆணையாளர் அரசு அலுவலர்கள் பங்கேற்காததால் ஆணையாளருக்கும் மேயருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதா? என்ற பரபரப்பு கேள்வி எழுந்துள்ளது.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் 2.24 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டடு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.இதனை பார்த்த சுந்தரி ராஜா இங்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்த காரணத்தினால் இங்கு வந்தேன். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரம் தெரிவித்து உள்ளீர்கள். பலமுறை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவுக்கு உரிய மரியாதை தருவதில்லை, அதிகாரிகள் போன் அடித்தால் எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை மாமன்ற கூட்டத்தில் கூறிவந்தனர், இந்த நிலையில் தற்போது ஆணையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் இந்த அடிக்கல் நாட்டு விழாவை புறக்கணித்தார்களா? கடலூர் மாநகராட்சி ஆணையாளருக்கும் மேயருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதா? இத்தனை கேள்விகள் எழும்புகின்றன, மக்கள் நலனில் கடலூர் மாநகராட்சி அக்கறை கொள்வது எப்போது என்ற கேள்வியை தான் பொதுமக்களும் கேட்டு வருகின்றனர்.