Tamil Nadu Women Priest : CM ஸ்டாலின் Appoint செய்த தமிழ்நாட்டின் பெண் ஓதுவார் -யார் இந்த சுஹாஞ்சனா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாராக சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 1970ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஏனினும் பல்வேறு சட்டப் வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. அதன் பின்னர் 51 ஆண்டுகள் கழிந்த நிலையில் அந்த கனவை தற்போது நிறைவேற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
இந்நிலையில் அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருந்தார். அவர்களில் ஒருவர் தான் இந்த சுஹாஞ்சனா.
கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகராக இருக்கலாம், கருவறைக்குள் பெண்கள் செல்ல கூடாது என்ற பல ஆண்டு கால நடைமுறை அனைத்தையும் தகர்த்தெறிந்து உள்ளார் சுஹாஞ்சனா.
பெண் ஓதுவராக பணியானை பெற்றுள்ள சுஹாஞ்சானவிற்கு 27 வயதாகிறது. இவர் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை கோயிலில் ஓதுவாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனக்கு ஓதுவார் பணி கிடைத்தது வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணம் என்கிறார் சுஹஞ்சன.
மேலும் பெண்கள் தாமாக விருப்பபட்டு முன்வந்து ஓதுவார் குறித்து படித்து தெரிந்து கொண்டு அவர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்.