Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?

Continues below advertisement

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலைகள் தேங்கும் மழைநீரை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த 2 தினங்களுக்கு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram