DMK Councillor Husband Suspend : போலீசை திட்டிய திமுக கவுன்சிலரின் கணவர்..அதிரடி காட்டிய துரைமுருகன்
Continues below advertisement
DMK Councillor Husband Suspend : சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு மாமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த நிரஞ்சனா என்பவர் உள்ளார். இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் காவல் துறையினரை மிரட்டுவது, ஆபாசமாக திட்டுவது வீடியோவில் பதிவானது. இந்த வீடியோ சமூகவலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இருந்து ஜெகதீசன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Continues below advertisement