TN Urban Local Body Election 2022 : கருப்பு மாஸ்க்.. சிவப்பு கார்.. வாக்களித்த நடிகர் விஜய்!

TN Urban Local Body Election 2022 : தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து, நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக தனது விருப்ப சிவப்பு நிற ஆல்டோ காரில் சென்று நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola