Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறை

Continues below advertisement

பாலங்களில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக சர்ச்சையான நிலையில், கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும், பாலங்களின் மீது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. 

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் புதன்கிழமை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் சென்னை வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாகி வருகிறது. வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்ப்படுத்தி விட்டு செல்கின்றது . குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்வதால் மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் மீது நேற்றே கார்களை வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் கார்களை எடுக்க சொன்னதாகவும், அதற்கு ஒத்துக் கொள்ளாதவர்களின் கார்களுக்கு அபராதம் விதித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த எவ்வித தடையும் இல்லை, அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு. உதவி தேவைபடும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறை எண் கொடுக்கபட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ‘சவாலான வானிலையின் போது வாகனங்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய, குடிமக்களுக்கு எங்கள் காவல் கட்டுப்பாட்டு அறை உதவும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியே எங்களின் முதன்மையான முன்னுரிமைகள் மற்றும் தேவையான ஆதரவை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எதேனும் உதவி தேவைபட்டால் 94981 81500 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram