Vanathi Srinivasan son: உருக்குலைந்த எம்எல்ஏ மகன் பயணம் செய்த கார்..என்ன நடந்தது..?
ABP NADU
Updated at:
14 Sep 2021 04:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppVanathi Srinivasan son: கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின்( BJP MLA Vanathi Srinivasan Son) மகன் ஆதர்ஷ்( Adharsh).இவர் ஞாயிறு நள்ளிரவு கோவையில்( Coimbatore) இருந்து சென்னைக்கு( Chennai) கார் மூலமாக சென்று கொண்டிருந்தார்.அதிவேகமாக சென்ற அவரது கார் கொண்டலாம்பட்டி பட்டர்ஃபிளை மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது அதிவேகமாக மோதியது.தலைகீழாக கவிழ்ந்த கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.( Car Accident) இதனால் கார் முற்றிலும் சேதமடைந்தது. இந்த பயங்கர விபத்தில் எந்தவித காயமும் இன்றி ஆதர்ஷ் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்