Zahir Hussain: ஆசிரியரிடம் பாலியல் சீண்டல்? ஜாகீர் உசேன் மீது 4 பக்க புகார்
Zahir Hussain: கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி கரூரில் உள்ள இசைப்பள்ளி ஒன்றிற்கு ஆய்வுக்காக ஜாகிர் உசேன் வந்துள்ளார். ஆய்வுப் பணிக்காக கரூர் வந்த ஜாகிர் உசேன் இசைப்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்ககம் ஆணையருக்கு மார்ச் 8ம் தேதி புகார் கடிதம் அளித்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்த புகார் கடிதம் குறித்த தகவல் தற்போது கசியத் தொடங்கி உள்ளது.