மேலும் அறிய

Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

​திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான 'பாத்ரூம்' முருகன், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் காரில் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் கணக்கு வழக்கு விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்தது. 

இவ்வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

​இந்நிலையில், முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன், இன்று தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலை, நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைத்து வீரபத்திரனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இத்தாக்குதலின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரது மனைவி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ASP) மஞ்சிமா தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

​இந்நிலையில், கொலையாளிகள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 

திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: போக்சோ, போதைப் பொருள் வழக்குகள் - புதியதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு
போக்சோ, போதைப் பொருள் வழக்குகள் - புதியதாக 30 சிறப்பு நீதிமன்றங்கள் - CM விஜய் உத்தரவு
பயணிகளுக்கு செம ஜாக்பாட்! பயணப் பாதுகாப்பு இனி உறுதி - ஜெர்மன் தொழில்நுட்ப எல்.எச்.பி. புதிய ரயில் பெட்டிகள்..
பயணிகளுக்கு செம ஜாக்பாட்! பயணப் பாதுகாப்பு இனி உறுதி - ஜெர்மன் தொழில்நுட்ப எல்.எச்.பி. புதிய ரயில் பெட்டிகள்..
சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவு? உயர்நீதிமன்றத் தீர்ப்பை பாதுகாக்க வேண்டும் - அன்புமணி
சிதம்பரம் நடராசர் கோயில் சீரழிவு? உயர்நீதிமன்றத் தீர்ப்பை பாதுகாக்க வேண்டும் - அன்புமணி
பொழுது போகலையா? விளையாட இடமில்லையா? சென்னைக்கு ஜாக்பாட் - 36 புதிய பூங்காக்கள், 11 மைதானங்கள்
பொழுது போகலையா? விளையாட இடமில்லையா? சென்னைக்கு ஜாக்பாட் - 36 புதிய பூங்காக்கள், 11 மைதானங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Embed widget