Alanganallur Jallikattu : என்ன யா நீயே பயப்புடுற? உரிமையாளரையே மிரள வைத்த காளை!

Continues below advertisement

Alanganallur Jallikattu : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குயது. வழக்கமாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என்கிற தொடர் வரிசையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஜனவரி 14 ல் அவனியாபுரம், ஜனவரி 15ல் பாலமேடு, ஜனவரி 16 ல் அலங்காநல்லூர் என்கிற வரிசை தான் இதுவரை பின்பற்றப்பட்டிருக்கிறது. கொரோனா தாக்கம்... ஒமிக்ரான் மிரட்டல் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு போடப்பட்டு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஜனவரி 16 ல் ஞாயிற்று கிழமை வந்ததும், பல பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு தீர்வு கண்ட தமிழ்நாடு அரசு, ஒரு நாள் இடைவெளி விட்டு ஜனவரி 17 ல்... அதாவது இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அலங்காநல்லூர் எப்போதும் ஸ்பெஷல். காரணம் அதன் வாடிவாசல். மற்ற வாடிவாசல்கள் எல்லாம், காளைகள் வெளியேறியதும் நேராக பாய்ந்து செல்லும் வடிவில் இருக்கும். ஆனால் அலங்காநல்லூர் வாடிவாசல் காலை வெளியேறியதும் நேராக வந்து இடது புறம் திரும்பிச் செல்லும் படி எல் வடிவில் இருக்கும். இதனால் காளைகள் நின்று விளையாட வாய்ப்புண்டு. இது போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். பார்வையாளர்களுக்கு விருந்து கிடைக்கும் என்பதால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எப்போதும் கொண்டாடப்படும்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram