Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த அதிகாரி?

திருப்புவனம் லாக்கப் மரணம் விவகாரத்தில் போலீசார் கொடூரமாக நடந்து கொண்டதன் பின்னணியில் தலைமைச் செயலக அதிகாரி ஒருவரின் அழுத்தம் இருந்ததாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யார் அந்த சார்? யார் அந்த தம்பி?  ஆகியவற்றை தொடரந்து தற்போது யார் அந்த அதிகாரி என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணம் அடைந்த சம்பவம் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அஜித்குமாரை திருப்புவனம் கோவிலில் உள்ள கோசாலையில் வைத்து காவலர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகளும் நேற்று வெளியாகி காவலர்கள் காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொள்ள யார் உரிமை கொடுத்தது என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே  நீதி்மன்றமும் மாநில அரசே தன்னுடைய குடிமகனை கொலைசெய்துள்ளது. நகை காணாமல் போன வழக்கில் போலீஸார் ஏன் FIR பதியவில்லை? யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது?, யாருடைய உத்தரவின்பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றமும் முன்வைத்துள்ளது.

இதனிடையே திருப்புவனம் விவகரத்தில் இந்த விசாரணை கொடூரமாக மாறியதற்கு  பின்னணியில் தலைமை செயலக அதிகாரி ஒருவர் இருப்பதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதாவது தலைமை செயலக அதிகாரி ஒருவர் கொடுத்த அழுத்தம் தான் இந்த விவகராம் இவ்வளவு கொடூரமாக மாறியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

திருப்புவனம் விவகாரத்தில் புகார்தாரரான நிகிதா தலைமை செயல அதிகாரி ஒருவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசி விசாரணையை தீவிரபடுத்தச் சொன்னதாகவும், அந்த அதிகாரி சிவகங்கை எஸ்.பி, ஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு உத்தரவிட உடனே எஸ்.பி மானாமதுரை டிஎஸ்பி யிடம் பேச அவர் ஸ்பெஷல் டீமை FIR- கூட போடாமல் விசாரிக்க உத்தரவிட்டதகவும் அதனைத் தொடர்ந்து தான் இந்த லாக்கப் மரணம் நடைபெற்றதகவும் தகவல் வெளியகியுள்ளது. 

இந்த நிலையில் தான் அண்ணாபல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியது பின்னர் டாஸ்மாக் முறைகேட்டில் யார் அந்த தம்பி என்றகேள்வியும் எழுந்த நிலையில் தற்போது யார் அந்த அதிகாரி என்ற பிரச்சாரத்தை தீவிரபடுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola