
Ajithkumar award: அஜித்திற்கு Padma Bhushan.. பின்னணியில் இருக்கும் அரசியல்! விஜய் தான் காரணமா?
நடிகர் அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு பிண்ணனியில் தவெக தலைவர் விஜய் இருப்பதாகவும், பாஜவுக்கு எதிரான அரசியல் நிலைபாட்டை விஜய் எடுத்திருப்பதால் அஜித் ரசிகர்களை கவரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த விருதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. இதில் பத்ம பூஷன் விருது தமிழ் திரைப்பட நடிகர் அஜித்குமார் உட்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டது. அஜித்திற்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அஜித்திற்கு இவ்வளவு ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்காமல் இப்போது அறிவித்திருப்பதில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சினிமாவில் விஜய்க்கு போட்டியாக இருப்பவர் அஜித். தற்போது தவெக என்ற கட்சியை விஜய் ஆரம்பித்து நடத்தி வரும் சூழலில் தன்னுடைய 69 வது படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு தீவிர அரசியலில் இறங்க உள்ளார். இதனிடையே சினிமாவில் நடித்திக்கொண்டே மறுபக்கம் பைக் ரேசில் தீவிரம் காட்டி வருகிறார் அஜித்.
அஜித் பைக் ரேசிலில் கலந்து கொள்வதற்கு முன்பு பயிற்சி எடுத்ததில் இருந்தே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் , அதிமுகவினர் பாஜக வினர், நாம் தமிழர் கட்சி என தவெகவை தவிர மற்றக்கட்சிகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து தெரிவித்தன. அண்மையில் துபாயில் நடைபெற்ற கார் ரேசில் அஜித் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. இதற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மத்திய பாஜக மாநில திமுக அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை தவெக தலைவர் விஜய் தீவிரமாக எடுத்திருக்கிறார்.
இதனால் விஜய்க்கு போட்டியாக அஜித் ரசிகர்களை எப்படியாவது தங்களது கட்சிக்கு வாக்களிக்க வைக்க வேண்டும் என்றும் அரசியல் ரீதியாக அஜித் ரசிகர்களை விஜக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று தான் தற்போது அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்க்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.