ADMK Poster | செங்கோட்டையனுக்கு நன்றி” ஜெயலலிதா, ஓபிஎஸ் போட்டோ! அதிமுக உரிமை மீட்பு குழு போஸ்டர்
செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து மயிலாடுதுறையில் அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்சனைதான் தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகியவர்களை ஒன்றினைக்க வேண்டும் என்றும் 10 நாட்கள் இபிஎஸ்-க்கு கெடு விதித்தார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஏற்றுக்கொள்ளவில்ல என்றால் அவர்களுடன் இணைந்து அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். செங்கோட்டையனின் இந்த செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து அவரது கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
அந்த மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளரையும் உடனே நியமித்தார். அதிமுவில் ஒரு்ு புறம் செங்கோட்டையனுக்கு எதிர்ப்பும் மறுபுறம் ஆதரவுக்குரல்களும் எழுந்து வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு ட்ட்தெரிவித்து வருகின்றனார். மறுபுறம் அதிமுகவில் பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், செங்கோட்டையனின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை நகரம் மற்றும் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவி அம்மாவின் நூறாண்டு கால கழக வெற்றி கனவை நிறைவேற்ற கழக மூத்த முன்னோடி கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் முயற்சிக்கு அதிமுக தொண்டர்களின் சார்பாக நன்றி என தெரிவித்து மயிலாடுதுறை மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.