Actor Vijay Car Case: மீண்டும் நீதிமன்றத்தை நாடிய விஜய்!காரணம் BMW!

Continues below advertisement

Actor Vijay Car Case: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள உள்ளனர். இந்த நிலையில், இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் இருந்து புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW X5 காருக்கு நுழைவு வரி கட்டணம் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்து BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram