Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

Continues below advertisement

தாம்பரம் அருகே  கொலை முயற்சி வழக்கில் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு வெளியே வந்த சிறார்கள் புத்தாண்டு அன்று  மீண்டும் பட்டாகத்தியுடன் ரீல்ஸ் செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது

சென்னை மேற்க்கு தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்,இந்த நிலையில்  புத்தாண்டு அன்று நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த சிறார்கள் சிலர் கையில் பட்டாகத்தியுடன்  ரீல்ஸ் செய்துள்ளனர் இதனால் அதிர்ச்சியடைந்த.அப்ப்குதியை சேர்ந்தவர்கள் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர்,

ஏற்கனவே சில நாட்களுக்கு  முன்பு அதே பகுதியில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இதே சிறார்கள் ஒருவரை சரமாரியாக வெட்டிய வழக்கில் சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைக்கபட்டனர்,

சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மற்றவர்களுக்கு தங்களை பெரும் ரவுடியாக சித்தரிக்கும் வகையில் பட்டாகத்தியுடன் ரீல்ஸ் செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டது தாம்பரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது,

ஏற்கனவே திருத்தணியில் ரயில் பயணித்த வடமாநில நபரை கஞ்சா போதையில் சீறார்கள் சிலர் பட்டாகத்தியை கொண்டு வெட்டி கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட சமபவம் அடஙகவதற்குள் இந்த சிறார்களளின் ரீல்ஸ் வீடியோ பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,

பின்னர் இந்த வீடியோ காட்சிகளை கொண்டு 16 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்த தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola