EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

Continues below advertisement

தேர்தலில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை கண்டறிய அமைக்கப்பட்டிருக்கும் கள ஆய்வுக்கு குழுவுக்கு ஸ்டாலின் 10 அதிரடி கட்டளைகளைப் போட்டிருக்கிறார்.

தற்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியின் அதிர்ச்சியிலிருந்து மீளாத திமுக தலைவர் ஸ்டாலின், தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய ஆயத்தமாகியிருக்கிறார்.

தவெக ஆட்சி பாதியில் கவிழலாம் என்று கட்சியினர் மத்தியில் கூறியிருக்கும் ஸ்டாலின்,

கட்சியின் கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்போவதாகவும் அதிரவைத்த கையோடு,

234 தொகுதிகளிலும் மக்களிடம் நேரடியாக சென்று தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய 38 பேர் கொண்ட கள ஆய்வுக் குழுவை அமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், கள ஆய்வுக்குழுவினரை இன்று சந்தித்த ஸ்டாலின் அவர்களுக்கு 10 முக்கிய கட்டளைகள் போட்டிருக்கிறார்.

அவை, 
* தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.

* நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. 

* இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது.

* கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும்.

* தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள்.

* நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.

* கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது.

* நீங்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில்தான் கழகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்களைச் செய்யப் போகிறேன்.

* அதனால் scan report போல துல்லியமாக இது இருக்க வேண்டும்.

* ஜூன் 5-க்குள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, இதன் மீதான நடவடிக்கைகளை ஜூன் மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும்" என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola