சீனியர்கள் OUT, இளைஞர்கள் IN ரெடியாகும் திமுக 2.0 அதிரடி காட்டும் ஸ்டாலின்

Continues below advertisement

தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், கட்சியின் கட்டமைப்பிலேயே மாற்றங்கள் செய்யப்போவதாக ஸ்டாலின் அறிவித்திருப்பது அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறது. அப்படி ஸ்டாலின் என்னென்ன மாற்றங்கள் செய்யப்போகிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

2026 தேர்தல் தோல்வி என்பது திமுகவை உலுக்கியுள்ள நிலையில், இந்த தோல்வியை காட்டிலும் பல திமுக தலைவர்களின் மனதை உருத்தி வருவது, எப்படி எம்.ஜி.ஆர்-ன் அரசியல் பிரவேசத்தின் போது 11 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் திமுக தவித்ததோ, அது போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டு விடுமோ? அசைக்க முடியாத சக்தியாக விஜய் உருவெடுத்துவிடுவாரோ என்பதே பலரின் கவலை..

இதனை திமுகவின் முக்கிய நபர்கள் சிலர் நேரடியாக ஸ்டாலினிடமே தெரிவித்துள்ளனர்..

இந்நிலையில் கட்சி கட்டமைப்பை மாற்றி, பல சீனியர்களுக்கு END CARD போட்டு, இளைஞர்களை உள்ளே கொண்டுவருவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார் ஸ்டாலின்..

வழக்கமாக ஒரு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அதை ஆட்சிக்கெதிரான மனநிலை என்று தோற்ற கட்சிகள் கடந்து செல்வதை போன்று இந்த முறை திமுகவால் கடக்க முடியவில்லை.

விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் என பல திட்டங்களை கொடுத்தும் ஏன் மக்கள் நம்மை நிராகரீத்து இருக்கிறார்கள் என்ற கேள்வியை ஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளிடம் முன்வைத்துள்ளார். 

மேலும் ஒரு கட்சி தேர்தலை சந்திக்க சில காரணிகள் காலம் காலமாக சொல்லபடுவதுண்டு, உதாரணமாக திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே தமிழகத்தின் கடைசி கிராமம் வரை நிர்வாகிகள் உண்டு,

முதலில் 75000 பூத்தில் போட உங்களுக்கு ஆள் இருக்கிறதா என்று கூட விஜய்யின் தவெகவை சிலர் வம்பிழுத்தனர்.

அது மட்டுமின்றி, விஜய் என்ற ஒற்றை முகம் போதுமா? அந்தந்த பகுதிகளில் செல்வாக்கான நபர்களால் தான் அங்கே வெற்றி பெற முடியும்..

குறிப்பிட்ட தொகுதியில் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களை தான் நிறுத்த வேண்டும். காசில்லாமல் தேர்தலை சந்திக்கவே முடியாது..

இப்படி பல விஷயங்களை அரசியல் அனுபவமே இல்லாத தமிழக வெற்றிக்கு கழகம் முதல் தேர்தலிலேயே அடித்து உடைத்துள்ளது.

அதனால் வெறும் திரை கவர்ச்சியை வைத்து விஜய் வெற்றி பெற்றுவிட்டார் என்று கடந்து செல்லாத ஸ்டாலின், தற்போது திமுகவை தூசி தட்டி தற்காலத்துக்கு ஏற்றவாறு, அதை கட்டமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார்.

தோல்விக்கான உண்மையான காரணங்களை மக்களிடத்திலே கேட்டு மறுசீரமைக்க போவதாக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.. 

திமுக இன்னும் எப்படியெல்லாம் உழைக்கணும்னு நீங்க ஓபன்-ஆ சொல்லுங்க-னு உடன்பிறப்பின் குரல் என்ற இணையதளப் பக்கத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.

கள ஆய்வு குழு தொகுதி வாரியாக மக்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பேசி ஜூன் 1 வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

அதேவேளையில் வீடியோவில், "கட்சியின் அணுகுமுறை, சிந்தனை, எல்லாவற்றையும் மாற்றணும். காலத்திற்கேற்ற மாதிரி மாறித்தான் ஆகணும். கட்சியோட எல்லா லெவல்லயும் தேவையான மாற்றங்களை செய்யப்போறேன்" என்று ஸ்டாலின் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.

இதனை திமுக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்வதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், சீனியர் தலைகளின் சீட்டை காலி செய்துவிட்டு, இளைஞர்களுக்கு அதிகளவில் பொறுப்புகள் வழங்க ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மக்களின் கருத்துக்கள், கள ஆய்வுக் குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு உன்மையில் திமுக 2.0-க்கு அடித்தளமிடுமா விரைவில் தெரியவரும்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola