Mahavishnu | ”சித்தர்கள் தான் சொன்னாங்க” மகாவிஷ்ணு பகீர் வாக்குமூலம்Shock ஆன போலீஸ்

என்னை தவறா புரிஞ்சிகிட்டாங்க, சித்தர்கள் தான் என்னை வழிநடத்துறாங்க என்று பள்ளிகளில்  சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணு காவல்துறையினரிடம் பரப்பரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். 


சென்னை அசோக் நகர் மகளிர் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மகாவிஷ்ணு என்பவர் பாவம், புண்ணியம், மறுபிறவி பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. அங்கேயே வைத்து இந்த பேச்சு தவறு என தட்டிக் கேட்ட ஆசிரியரையும் தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்தது மிகப்பெரிய சர்ச்சையானது. 

மேலும், சென்னை அசோக்நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மகாவிஷ்ணுவின் பேச்சை கண்டித்து அவரிடம் கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரிடம் அவர் பேசிய விதமும், அவரை அவர் கேள்வி எழுப்பிய விதமும் கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சார்பில் சைதாப்பேட்டை மற்றும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட மகாவிஷ்ணு, தான் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், நான் ஓடி ஒழியவில்லை என்றும் இது குறித்து   அமைச்சரிடம் நேரில் சென்று விளக்கம் அளிப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்தே அவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மகா விஷ்ணு தற்போது புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றும், பல இடங்களில் தான் இவ்வாறே பேசியதாகவும், சித்தர்கள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola