
Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் சீண்டலுக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த அருண் பெங்களூரில் கார் ஒட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி, மகள் அக்ஷரா, மகன் அஷ்விக் ஆகியோருடன் நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று வருகின்றனர். கணவர் அருண் வாரம் ஒரு முறை வீட்டிற்க்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வீட்டில் தனியாக பெண் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதவை தட்டி உள்ளார். உறவினராக இருக்கும் என்று கருதி அஸ்வினி காதவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக அந்த பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெண் உடனடியாக காவல் எண் 100 க்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து தன்னுடைய கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...