மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்

Continues below advertisement

நகராட்சி துப்புரவு பணிகளுக்கு 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் எழுதி வாங்கிக் கொள்ளும் கொத்தடிமை முறையை தனியார் நிறுவனம் புதிதாக அரங்கேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு துறையூர் பகுதியை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ் ஆர் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது துப்புரவு தூய்மை பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அந்த நிறுவனம் கொத்தடிமைகளை போல பத்திரத்தில் எழுதி வாங்கும் வினோதம் அரங்கேறி வருகிறது

எஸ் ஆர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்ந்த கண்காணிப்பாளராக உள்ள அருண் என்பவர் 100 ரூபாய் பத்திரத்தில் துப்புரவு பணி செய்ய வரும் பணியாளர் அரசின் எந்த சலுகையும் கேட்கக் கூடாது குறிப்பாக நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஐ பிஎப் போன்றவற்றை கேட்கக்கூடாது குறிப்பாக பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடத்தக்கூடாது போராட்டம் நடத்தினால் நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கே கட்டுப்பட்டு பணியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என 100 ரூபாய் பத்திரத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கி கொத்தடிமைபகளை  போல் மாற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது

குறிப்பிட்ட காலம் பணியாற்றினால் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் சங்கங்கள் மூலம் அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டு அதன் பிறகு தீர்வு காணப்பட்டு வரும் நடைமுறையை மாற்றி மீண்டும் பழைய கொத்தடிமை முறையை இந்த நிறுவனம் புகுத்தி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர், வேறு வழி இல்லாமல் சில பணியாளர்கள் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்திட்டு செல்லும் நிலையும் உள்ளது

தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை முழுமையாக கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola