Salem Jail Prisoners : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..

Continues below advertisement

கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்திலும் சேலம் மத்திய சிறைச்சாலை கைதிகள் சிறந்து விளங்குவதால் மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.

தவறு செய்து விட்ட மனிதன் அதிலிருந்து திருந்துவதற்காகவே நீதிமன்றம் தண்டனைகளை விதிக்கிறது. தண்டனைக்குள்ளானவர்கள் அடைக்கப்படும் சிறைச்சாலைகள், அவர்களை அந்த தவற்றின் பிடியிலிருந்து மீட்கத் தொடங்கும்போது குற்றம் குறைந்து மீண்டும் மனிதம் மலர்கிறது.

இதுபோன்றதொரு நடவடிக்கையை சேலம் மத்திய சிறை நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் திருக்குறள், கைதிகளின் மன அழுத்தம் நீங்க விளையாட்டுடன் கூடிய உளவியல் பயிற்சி, எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் பயிற்சி என தொடர்ச்சியாக பல்வேறு மனித நேய நடவடிக்கைகளில் சேலம் மத்திய சிறை நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறையில் தண்டனைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில், சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து திரும்பும் போது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் தொழிற் பயிற்சி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சிறைக்கு வருவதற்கு முன்னர் நல்ல முறையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனித்திறமைகள் கொண்ட சிறைக்கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாயிலாக மற்ற சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பரோட்டா மாஸ்டர் பயிற்சியினை சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் வினோத் தொடங்கி வைத்தார். முழுமையாக அனைவருக்கும் பரோட்டா மாவு வழங்கப்பட்டு செயல்முறை பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, சிறு வணிகக்கடை வைத்தல் போன்ற பயிற்சியை வாரம் தோறும் வழங்கவும் சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலைகள் தண்டனைக் கூடங்களாக இல்லாமல் தவறை உணர்ந்து திருந்த நினைப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்களாக மாற்றம் பெறுவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram