Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

Continues below advertisement

நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வைத்து, பிரபல ரவுடி ஜானை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் கிச்சிபாளையம் சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர் மீது கொலை, கஞ்சா விற்பனை, அடிதடி, கட்ட பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜானை தூக்க நீண்ட நாடகளாக போலீஸ் திட்டம்போட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நெப்போலியன் என்பவரை கொலை செய்த வழக்கில் நேற்றைய தினம் வாய்தாவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார் ஜான்.
 

உடனடியாக அவரது வருகையை அறிந்த காவல்துறை, போலீஸ் வேனை எடுத்துக்கொண்டு வந்து நீதிமன்ற வாசலில் தயார் நிலையில் காத்திருந்தனர். அப்போது மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வெளியே வந்த ஜானை, கோழியை அமுக்குவது போல் அமுக்கினர் போலீசார்.

காரின் முன்பு திடிரென வந்து நிறுத்திய போலீசார், ஒருபக்கம் கேட்டையும் சாத்தினர். இதனால் தன்னுடைய காரில் அங்கிருந்து எஸ்கேப் ஆக நினைத்த ரவுடி ஜான், போலீசிடம் சிக்கினார். காரின் கதவை திறந்த பத்துக்கும் மேற்பட்ட போலீஸ், குண்டுகட்டாக ஜானை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தூக்கி சென்றனர்.

எந்த வழக்கில் கைது செய்கிறீர்கள் என்று கூறினால் தான் இறங்குவேன் என்று ஜான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உண்டானது.

கஞ்சா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி ஜான் கடந்த சனிக்கிழமை தான் 55 நாட்களுக்குப் பிறகு ஜாமினில் வெளிவந்தார், இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் காவல்துறையினர் அவரை தூக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram