EPS in Murugan Temple : நெருங்கும் தேர்தல் ரிசல்ட்EPS கோயில் விசிட்முருகனுக்கு அரோகரா!

Continues below advertisement

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உள்ள மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்து மலை முருகன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூர், முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையின் திருவடியில் மலர் தூவி வணங்கிய அவர் முருகன் வேலை தாங்கி மூலவரை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

 

மேலும் முருகன் சிலையின் உச்சிக்கு சென்று சங்கல்ப பூஜை செய்து, பன்னீர் கலசத்தை கொண்டு வேலுக்கு அபிஷேகம், செய்தும் மலர் தூவியும் வழிபட்டார். இதனை அடுத்து சிலையின் வயிற்றுப் பகுதியில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்த எடப்பாடி பழனிசாமி பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கினார். 

 

குறிப்பாக, அண்மையில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று வந்தது. இதனால் அதிமுகவினர் பெரும் கலக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முருகனின் இடுப்பு பகுதியில் அமைந்துள்ள தியான பீடத்தில் 15 நிமிடங்கள் ஆழ்ந்த தியானம் மேற்கொண்டார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram