Rowdy Padappai Guna | படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியை தட்டித்தூக்கிய கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை

Rowdy Padappai Guna : படப்பை குணாவை பிடிக்க பல்வேறு யூகங்கள் வகுக்கப்பட்டது. படப்பை குணா மீது எட்டு கொலை வழக்குகள் மட்டும் 9 கொலை முயற்சி வழக்கு உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குணாவை ஸ்கெட்ச் போட்டு பிடிக்க நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், பயந்து போன படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதால், படப்பை குணாவின் முக்கிய கூட்டாளியான போந்தூர் சிவா மற்றும் போந்தூர் சேட்டு ஆகிய இருவரை கைது செய்தனர். அதேபோல படப்பை குணாவின் ஆதரவாளராக இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தென்னரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக செங்கல்பட்டு , காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் குறைவாகவே இருந்து வந்தது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola