Andhra Aadudam scam : ”உடனே ஆக்‌ஷன் எடுங்க” சிக்கலில் ரோஜா நடந்தது என்ன?

Continues below advertisement

ஆடுதாம் ஆந்திரா நிதி மோசடி புகாரில் ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரோஜவை கைது செய்ய வாய்ப்புள்ளத என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், கடைசி 2 ஆண்டுகள் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் இருந்தவர் நடிகை ரோஜா. அப்போது ரோஜா நடத்திய 'ஆடுதாம் ஆந்திரா' என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தினார்.அந்த போட்டிகளை நடத்த அப்போது இருந்த ஜெகன் மோகன் அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி, ஆத்யா- பாத்யா அமைப்பினர் விஜயவாட சிஐடி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் தர்மன கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தனர்.போட்டிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக பல தரப்பினர் ஆந்திர சிஐடி போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி ஆந்திர சிஐடி போலீஸ் விஜயவாடா போலீஸ் ஆணையருக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், இந்த ஊழல் முறைகேடு குறித்து நடிகை ரோஜாவை எந்த நேரத்திலும் விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகம் விசாரணைக்கு அழைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram