
RK Nagar Police Station Arson அலட்சியம் செய்த போலீஸ்? இளைஞர் தீக்குளிப்பு காவல் நிலைய முன் பயங்கரம்
புகார் கொடுக்க வந்த இளைஞர்
பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு
நெஞ்சை பதற வீடியோ காட்சி
சென்னை ஆர்.கே நகர் காவல் நிலையம் முன் பெட்ரோலை ஊற்றி கொண்டு இளைஞர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது. இதன் வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த ராஜன் என்பவர் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் தனது நண்பர்கள் 2 பேர் தாக்கியாதாக புகார் கொடுக்க சென்றுள்ளார். அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்தாதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென காவல் நிலையத்தின் வாசாலில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு ராஜன் தீ வைத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
காவல்துறையினர் ராஜன் மீது பற்றி ஏரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பெட்ரோல் ஊற்றி கொளுத்திக் கொண்ட ராஜனின் உடல் 90 சதவீதம் எரிந்த நிலையில் போலீசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் ராஜனின் குடுபத்தினர் குவிந்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.