ரதன் பண்டிட்-க்கு பதவியா? ரவுண்டு கட்டிய விசிக கம்யூ உடனே பின்வாங்கிய CM விஜய்

Continues below advertisement

முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு இன்று சட்டப்பேரவையிலேயே வன்னி அரசு, பிரேமலதா உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உடனடியாக அவரது நியமனத்தை திரும்ப பெற்றுள்ளது தமிழக அரசு.

தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில், முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இவரது பணிகள் என்ன தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ரிக்கி ராதன் பண்டிட், மிகவும் பிரபலமான அரசியல் ஜோதிடர்களில் ஒருவர். ஜோதிடர் ஒருவருக்கு அரசுப் பதவி கொடுத்தது கடுமையான விமர்சனத்தில் சிக்கியது. அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.

இன்று சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ரதன் பண்டிட் நியமனம் தொடர்பாக ஆதரவு MLAக்களும் எதிர் தரப்பு MLA-க்களும் தவெக தலைமையிலான அரசை ரவுண்டுகட்டினர்.

இந்தநிலையில் கடும் எதிர்ப்பை தொடர்ந்து உடனடியாக அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது தமிழக அரசு.  முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு இன்று சட்டப்பேரவையிலேயே வன்னி அரசு, பிரேமலதா உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உடனடியாக அவரது நியமனத்தை திரும்ப பெற்றுள்ளது தமிழக அரசு.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola