அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai

Continues below advertisement

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை பி.ஆர். கவாய் மீது காலணி எறிந்து தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கிய அட்வகேட் ராகேஷ் கிஷோர் ஐ அடையாளம் தெரியாத குழு செருப்பால் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ சமூக வளைதளத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒரு வழக்கின் வழக்கறிஞரின் குறிப்பைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ​​ஒரு வழக்கறிஞர் கோபமடைந்தார். "சனாதன தர்மத்தை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று அவர் கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களின்படி, வழக்கறிஞர் மேடைக்கு அருகில் சென்று தனது காலணியை கழற்றி நீதிபதி மீது வீச முயன்றுள்ளார். இருப்பினும், நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் சரியான நேரத்தில் தலையிட்டு வழக்கறிஞரை வெளியே அழைத்துச் சென்றதால் மோசமான சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. அப்போது தலைமை நீதிபதி எந்தத் தயக்கமும் இல்லாமல், நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை தங்கள் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும், "இதற்கெல்லாம் கவனம் சிதறாதீர்கள். நாங்கள் கவனம் சிதறவில்லை. இவை என்னைப் பாதிக்காது" என்று பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

இடையூறு ஏற்படுத்திய வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள டிசிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற அதிகாரிகள், பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பாளருடன் பேசினார்.

இந்த சம்பவத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடுமையாகக் கண்டித்தனர். "ஒரு வழக்கறிஞர் தனது தகாத மற்றும் கட்டுக்கடங்காத நடத்தையால், இந்திய தலைமை நீதிபதி மற்றும் அவரது சக நீதிபதிகளின் பதவி மற்றும் அதிகாரத்தை அவமதிக்க முயன்றதற்கு நாங்கள் ஒருமனதாக எங்கள் வேதனையை வெளிப்படுத்துகிறோம்" என்று சங்கம் தெரிவித்தது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை பி.ஆர். கவாய் மீது காலணி எறிந்து தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கிய அட்வகேட் ராகேஷ் கிஷோர்ஐ அடையாளம் தெரியாத குழு அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று  டெல்லி கார்கர்தூமா கோர்ட் வளாகத்தில் இளம் பெண் ஒருவர், தனது செருப்பை கழற்றி ராகேஷ் கிஷோர்- ஐ அடிக்க முயன்றார். மேலும் ஆபாச வார்த்தைகளுடன் அவர் கத்தியபடி இரண்டு சப்பல்களை எறிந்தார். ராகேஷ் கிஷோர் கையால் தடுக்க முயன்றபோதும், ஒரு சப்பல் அவரது முகத்தில் பட்டது.. நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அங்கிருந்த சிலர் அவரைப் பிடித்து இழுத்த நிலையில், இன்னொரு நபர் கையால் அறைந்ததாகவும் தெரிகிறது. செக்யூரிட்டி ஊழியர்கள் ஓடி வந்து சம்பவத்தை தடுத்தி நிருத்தினர். தாக்குதலுக்கு உள்ளான போதும் “சனாத தர்மம் வெல்க… சனாதன தர்மம் வெல்க…” என அவர் முழக்கமிட்டார். இந்த தாக்குதலில், தனக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் இந்த சப்பல் தாக்குதலை பதில் அடி என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்று சட்ட ரீதியான போராட்டத்தை வலியுறுத்துபவர்களும் உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீஸ் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை. ராகேஷ் கிஷோர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார், என்ன நோக்கம் என்பது குறித்து விசாரணை தொடங்குமா என்பது இன்னும் தெரியவில்லை.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola