
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
வேலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை ரயிலில் பலாத்காரம் செய்ய முயற்சி பெண் சத்தம் போட்டதால் ஓடும் ரயிலில் கீழே தள்ளிய நபர் கைதான நிலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து இடது காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சித்தூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியான இவர், தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் செல்வதற்காக கோயம்புத்துாரில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.
ரயில் பிற்பகல் 3 மணி அளவில் வேலுார் மாவட்டம் குடியாத்தம் - கேவி குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது ரேவதி கழிவறை பெட்டிக்கு சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். சக பயணிகள் வருவதற்குள் கர்ப்பிணிப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு எதுவும் தெரியாதது போல் வேறொரு கம்பார்ட்மென்ட்க்கு சென்று தப்பியுள்ளார்.
அதன் பின்னர் தண்டவாளத்தின் அருகே பெண்ணின் கை கால் தலை ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன் இருந்த இளம் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டு நள்ளிரவு இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
கர்ப்பிணிப் பெண் ஹேமராஜின் புகைப் படத்தை அடையாளம் கண்டு கூறிய நிலையில் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரயிலில் தொடர் குற்றங்கள் செய்யும் பட்டியலில் உள்ள ஹேமராஜ் மீது பல்வேறு வழக்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஹேமராஜ் கைதான நிலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து தற்போது ஹேமராஜிக்கு இடது காலில் மாவு கட்டும் போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.