YS Sharmila slams Modi : இடுப்பளவு வெள்ள நீர்..மோடியை பந்தாடிய சர்மிளா! கலக்கத்தில் ஜெகன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு சென்ற ys சர்மிளா இடுப்பளவு தேங்கி நின்ற வெள்ள நீரில் இறங்கி விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
ஆந்திராவில் பெய்த கனமழையால் மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களில் வெள்ளி நீர் தேங்கியதால் பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர்
ys சர்மிளா நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது இடுப்பளவு வெள்ள் நீர் தேங்கி நின்ற வயலில் சர்மிளா உள்ளே இறங்கி விவசாயிகளுடன் நின்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெள்ள நீரில் நின்றுகொண்டே பத்திரிகையாளர்களை சந்தித்த சர்மிளா, ‘’சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே தற்போதைய பாதிப்புக்கு காரணம் என சர்மிளா குற்றம் சாட்டினார். மேலும் விவசாயிகளுக்கு உதவ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
ஆந்திராவை இந்தியாவின் ஒரு அங்கமாக மோடி அரசு கருதவில்லை எனத் தெரிகிறது. பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வுக்காக கூடுதல் நிதியைப் பெற்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும் ஆந்திரப் பிரதேசம் எந்த நிவாரணமும் பெறவில்லை. என கடுமையாக சாடியுள்ளார் சர்மிளா
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இரு கூட்டணி அரசுகளும் எப்படி நடத்துகின்றன என்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்க்கட்டும், அங்கு பாஜக வழக்கம் போல் மாநிலத்தின் மீது பாகுபாடான அணுகுமுறையைக் காட்டுகிறது, அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் விவசாயிகளுக்கும் வெள்ளத்திற்கும் நேரமில்லாமல் தனிப்பட்ட நலன்களுக்காக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.. முதல்வர் உடனடியாக இதில் கலந்து கொண்டு விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என ஜெகனையும் அட்டாக் செய்துள்ளார் சர்மிளா