Savukku shankar | கார் ரேஸ்.. தொடர் வழக்கு..காரணம் இவர் தான்''சவுக்கு சங்கர் பரபர
பிணை பல்வேறு வழக்குகளில் கைதான யூடியுபர் சவுக்கு சங்கர் இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு சொந்த பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அப்போது வெளியில் வந்து உதயநிதி குறித்து சவுக்கு சங்கர் அளித்த பேட்டி சர்சையை கிளப்பியுள்ளது.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை அருகே மதகுபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகங்கை சைபர் கிரைம் பிரிவில் கடந்த 6.5.2024 -ல் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை போலீஸார் இன்று கைது செய்து சிவகங்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கில் அவரை சொந்த பிணையில் நீதிபதி ஜெ.ஆப்ரின் பேகம் விடுதலை செய்தார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
தன் மீது புதுப்புது வழக்குகளில் தினமும் கைது செய்யப்பட்டு வருகிறேன். எல்லா வழக்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். உதயநிதி நடத்தும் கார் பந்தயம் முடிவு பெறும் வரை, நான் வெளியில் வராத வகையில் தினசரி புதுப்புது வழக்குகள் பதிவு செய்யப்படு வதாகவும் குற்றம்சாட்டினார்.