BJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

Continues below advertisement

”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்

பாஜக திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர் தன்னை ஏமாற்றி ஆறு லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் எஸ்ஐ மனைவி எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூ டவுன் பகுதியை சார்ந்த கோவிந்தன்  முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர். இவரின் மனைவி  மலர்க்கொடி. இவரின் கணவர் உயிரிழந்த நிலையில் கணவரின் ரிடெயர்மண்ட் பணம் சமீபத்தில் வந்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சௌந்தரராஜன் மகன் விவேகானந்தன் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். 

இவர் கடந்த ஆண்டு 6 லட்ச ரூபாயை மலர்க்கொடியிடம் கடனாக பெற்று திருப்பித் தருவதாக கூறியதாகவும் ஆனால் பலமுறை விவேகானந்தனிடம்  கொடுத்த பணத்தை கேட்டும் தராமல் இழுத்தடித்து பண மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மலர்கொடி திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  திருப்பத்தூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் விவேகானந்தன் தன்னிடம் பண மோசடி செய்தாக கூறி தனது பணத்தை மீட்டு தரக்கோரியும் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மலர்க்கொடி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram