ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!
இந்தியவில் பணக்கார முதல்வர் யார் ? ஏழை முதல்வர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற தகவலை பார்க்கலம்...
ADR என்று அழைக்கப்படும் ஜனநாயகத்துக்கான சீர்த்திருத்த சங்கம் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பு அவர்கள் மீதுள்ள வழக்கு விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போதும் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை விவரங்களை அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
பணக்கார முதலமைச்சர்களாக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 931 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு ரூ.332 கோடிக்கு மேல் சொத்துக்களுடன் பணக்கார முதலமைச்சர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். கர்நாடகாவின் சித்தராமையா ரூ.51 கோடிக்கு மேல் சொத்துகளுடன் பணக்கார முதல்வர்களில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஏழை முதல்வர்கள் என்று பார்த்தால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு வெறும் 15 லட்சம் மட்டுமே சொத்து மதிப்பாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55 லட்சம் மதிப்பிலான சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் 1கோடியுடன் ஏழை முதல்வர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.8 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு எந்தக் கடனும் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட வருமானமாக ரூ.28 லட்சம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.அதேபோல், புதுச்சேரியின் முதல்வர் ரங்கசாமி ரூ.38 கோடி சொத்துக்களுடன் 6-ம் இடம் பிடித்துள்ளார்..
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்த தகவல்களை மாநில முதல்வர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வேட்புமனுக்களில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.