KP Anbalagan Profile: அரசியல் தொடக்கம் ஒரு விபத்து! அதற்குப்பின் கிடுகிடு வளர்ச்சி!யார் இந்த கேபி அன்பழகன்?

Continues below advertisement

KP Anbalagan Profile: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கால ஆட்சியில் ஊழல் லஞ்சம், மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகார்களில் மாஜி அமைச்சர்கள் சிக்கி வருகிறார்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இப்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கேபி அன்பழகன் தனது குடும்பத்தினர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும், சொத்துக்குவிப்பு தொடர்பாக கேபி அன்பழகனின் மனைவி, 2 மகன்கள், மருமகள் உள்ளிட்டோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பழகன் தன்னுடைய வருமானத்தை விட கூடுதலாக ரூபாய் 11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது... அன்பழகனின் மனைவி 2 மகன்கள், மருமகள் உள்பட 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது… யாரிந்த கேபி அன்பழகன், அமைச்சராக என்ன செய்தார்?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram