Bhole Baba Hathras Stampede : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?
காவி உடையில் வளம் வரும் ஒல்டன் டே சாமியார்கள் மத்தியில், வெள்ளை நிற கோட் சூட்டில், கூலிங் கிளாஸுடன், ஸ்போர்ட்ஸ் ஷு அணிந்து பந்தாவாக வலம் வருபவர் தான் இந்த போலே பாபா..
உத்திரபிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில், இவர் நடத்திய ஆண்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிக்கி தற்போது வரை 132 பேர் உயிரிழ்ந்துள்ள நிலையில், போலே பாபா தற்போது தலைமறைவாகிவிட்டதாக சொல்லபடுகிறது
.
விவசாய குடும்பத்தை பின்புலமாக கொண்டு உத்திரபிரதேச காவல்துறையில் சாதாரண கான்ஸ்டபிலாக இருந்த சூரஜ் பால், எப்படி போலே பாபாவாக மாறினார் என்ற கதை சுவாரசியமானது.
18 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரபிரதேசத்தின் காவல்துறையின், உளவு பிரிவில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த சூரஜ் பால், மக்களிடையே பேசி அவர்களை தனக்கு ஏற்றவாறு ஆட்டி வைப்பதில் வல்லவர். பல நேரங்களில் இதன் மூலம் பொதுமக்களின் பிரச்சனையை இவர் தீர்த்து வைத்துள்ளார்.
சாமியார்களின் பூமியாக கருதப்படும் உத்திரபிரதேசத்தில், பல்வேறு ஆன்மிக சொற்பொழிவில் கலந்துகொண்ட இவருக்கு, ஆர்வம் அதிகரித்துள்ளது.. நாமும் ஏன் ஆன்மீக வாதியாக மாறக்கூடாது என்ற எண்ணம் எழுந்துள்ளது. அதனால் மக்களின் துயரை துடைக்க வந்துள்ளேன் என்று கிராமத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட சூரஜ் பாலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் தன்னுடைய அரசு பணியை உதறி தள்ளிவிட்டு தன்னுடைய மனைவையின் உதவியோடு சொந்த கிரமாமான பட்டியாலியில் முதல் ஆசிரமத்தை தொடங்கியுள்ளார். இங்கிருந்து தான் சூரஜ் பாலாக இருந்தவரின் பெயர் சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்று மாறிவிட்டது. ஊர் மக்கள் அனைவரும் இவரை போலே பாபா அதாவது அப்பாவி ஒன்றும் அறியாத ஆன்மீகவாதி என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.
பட்டி தொட்டியெல்லாம் போலே பாபாவின் புகழ் ஒலிக்க, முதலில் நூற்றுக்கணக்கில் வந்த பக்தர்களின் கூட்டம், ஆயிர கணக்கில் எகிற தொடங்கியுள்ளது. இதனால் உத்திரபிரதேசம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கலான ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் ஆசிரமத்தை தொடங்கினார்.
வழக்கமான பழைய சாமியார்கள் போல் வயதான கோலத்தில், காவி உடை அணிந்து சாந்தமாக வருவது போலே பாபாவின் ஸ்டைல் இல்லை.. வெளு வெளுக்கும் White கோட், சூட்டில், கூலிங் கிளாஸுடன், ஸ்போர்ட் ஷு அணிந்து வரும் போலே பாபா மன்னர்கள் அமர்வது போன்ற ராஜ சிம்மசானத்தில் தான் அமருவார்.
மேலும் போலே பாபாவின் மற்றோரு முக்கியமான யுத்தி, அவருக்கு வரும் விலை உயர்ந்த பரிசுகள், பொருட்கள், பக்தர்களின் நன்கொடை அனைத்தையுமே, அதே இடத்தில் பிரித்து தன்னுடைய ஆன்மீக சொற்பொழிவில் பங்கேற்கும் ஏழை பக்தர்களுக்கு வழங்கிவிடுவது தான் போலே பாபாவின் ஸ்டைல்.
இதனால் முதலில் கடவுளின் தூதராக பார்க்கபட்ட போலே பாபா, ஒரு கட்டத்தில் கடவுளாகவே அவருடைய பக்தர்களால் ஏற்றுகொள்ளபட்டுள்ளார். உத்திரபிரதேசத்தின் பல முன்னணி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே போலே பாபாவின் Devotees தான் என்று சொல்லபடுகிறது.
மேலும் சமூக வளைத்தளங்களிலும் போலே பாபா, இத்தனை லட்சம் கொடுத்தார், கொடிய நோயை குணமடைய செய்தார் என்றேல்லாம் வீடியோக்கள் பரவியதால், போலே பாபாவின் ஆன்மீக சொற்பொழிவுக்கான டிமாண்ட் எகிரியுள்ளது.
இப்படிபட்ட சூழலில் தான் உத்திரபிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில், இவர் நடத்திய ஆண்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.
முறையான பாதுகாப்பு, சரியான வசதி எதுவுமே அங்கு செய்யப்படவில்லை என்று சொல்லபடுகிறது. போலே பாபா தன்னுடைய பேச்சை முடித்துக்கொண்டு திரும்புகையில், அவருடை காலடி மண்ணை எடுப்பதற்காக, ஒரு கூட்டம் முண்டியடித்துள்ளது. மேலும் காற்றோற்றம் இல்லாததால் சிலர் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றுள்ளனர்.
அப்போது ஒருவர் தடுக்கி கீழே விழ, அவர் மீது பலர் விழ, பதற்றமான மக்கள் கூட்டம் அங்கிருந்து ஓடி தப்பிக்க முயன்ற போது, இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. தற்போது வரை 132 நபர்கள் உயிரிழந்துள்ளதாக சொல்லபடும் நிலையில், போலே பாபா தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.