VK Pandian retires Politics : ”எனக்கு பதவி ஆசையில்ல! தோல்விக்கு நான் காரணமா?” V.K.பாண்டியன் உருக்கம்

Continues below advertisement

”எனக்கு பதவி ஆசையில்ல! தோல்விக்கு நான் காரணமா?” V.K.பாண்டியன் உருக்கம்

பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு வி.கே.பாண்டியனே காரணம் என்றும் கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்தது. இதுதொடர்பாக பேசிய நவீன் பட்நாயக், பாண்டியன் மீதான விமர்சனங்கள் துரதிருஷ்டவசமானது என்றும், தனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் இல்லை என்றும் தெரிவித்தார். பிஜூ ஜனதா தளத்தின் அடுத்த தலைவரை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

இந்நிலையில் வி.கே பாண்டியனை அரசியலில்  இருந்து விலகுவதாக உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில்:

ஜெய் ஜெகன்நாத்! நான் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன்

ஐஏஎஸ்-ல் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே சிறுவயதில் இருந்து எனது ஆசை

கடவுள் ஜெகன்நாத் அதனை நனவாக்கினார்

எனது குடும்பத்தினர் கேந்திரபாடாவை சேர்ந்தவர்கள் என்பதால் நான் ஒடிசாவுக்கு வந்தேன்

நான் ஒடிசாவில் கால் பதித்தது முதல் ஒடிசா மக்களின் அளவற்ற அன்பையும், பாசத்தையும் பெற்றுள்ளேன்

தரம்காட் முதல் ரூர்கேலா வரை மயூர்பஞ்ச் முதல் கஞ்சம் வரை மக்களுக்காக கடுமையாக உழைக்க முயற்சித்தேன்

12 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் அலுவலகத்தில் சேர்ந்தேன், நவீன் பட்நாயக்கிடம் பணிபுரிவது பெருமையாக இருந்தது

அவரிடமிருந்து நான் பெற்ற அனுபவம் வாழ்நாள் முழுவதும் இருக்கும்

ஒடிசாவிற்கான அவரது தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த வேண்டும் என்பதையே அவர் என்னிடமிருந்து எதிர்பார்த்தார்

அவர் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, பெண்கள் முன்னேற்றம், கோயில் சம்பந்தமான திட்டங்களில் சாதித்து காட்டினார்

இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகப் பணியாற்றுவது எனக்கு மனநிறைவை அளித்தது

அரசுப் பள்ளியில் படித்த எனது சிறுவயது நினைவுகள் அதைச் செயல்படுத்த எனக்கு உதவியது

கோவிட் பாதிப்பு நேரத்தில் சுகாதார உள்கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக 30 மாவட்டங்களுக்கு பயணம் செய்தோம்

2 புயல்களை கடப்பதற்கு கடுமையாக உழைத்தோம்

எனது வழிகாட்டியான நவீன் பட்நாயக்கிற்கு உதவுவதற்காக ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தேன்

சிஷ்யராகவோ, குடும்பத்தினராகவோ அவருக்கு உதவுவதே எனது நோக்கம்

சிலவற்றை என்னால் திறம்பட எதிர்கொள்ள முடியவில்லை என்ற குறையும் இருக்கிறது

அரசியல் பதவி மீதோ, அதிகாரம் மீதோ எனக்கு எந்த ஆசையும் இல்லை

அதனால்தான் நான் வேட்பாளராகவும் நிற்கவில்லை, பிஜூ ஜனதா தளத்தின் எந்த பதவியையும் வகிக்கவில்லை

கடந்த 12 ஆண்டுகளாக ஒடிசாவிற்காகவும், நவீன் பட்நாயக்கிற்காகவும் நாள் முழுவதும் வேலை செய்தேன்


இன்று வரை, என் தாத்தா பாட்டியிடம் இருந்து நான் பெற்ற சொத்து மட்டுமே என்னிடம் உள்ளது

நான் ஐஏஎஸ் ஆன போது இருந்த சொத்துதான் 24 ஆண்டுகளாக அப்படியே இருக்கிறது

ஒடிசா மக்களின் அன்பும், பாசமும் தான் நான் இத்தனை ஆண்டுகளில் சம்பாதித்தது

நவீன் பட்நாயக்கிற்கு உதவ வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது

தற்போது தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்

இந்தப் பயணத்தில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

எனக்கு எதிரான பிரச்சாரம் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தால் வருந்துகிறேன்

பிஜு ஜனதா தளத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

நான் எப்போதும் ஒடிசாவை இதயத்திலும், நவீன் பட்நாயக்கை என் மூச்சிலும் வைத்திருப்பேன்

அவர்களின் நல்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் ஜெகனநாதரை பிரார்த்திப்பேன். ஜெய் ஜெகன்நாத்!

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram