VK Pandian Casts Vote : ‘’யாரென்று தெரிகிறதா?’’ஆட்டோவில் வந்த V.K.பாண்டியன்!வியந்து பார்த்த மக்கள்!

Continues below advertisement

VK Pandian Casts Vote : ‘’யாரென்று தெரிகிறதா?’’ஆட்டோவில் வந்த V.K.பாண்டியன்!வியந்து பார்த்த மக்கள்!

ஒடிஷா

மக்களவை தேர்தல் 2024

பரபரக்கும் தேர்தல் களம்

ஆட்டோவில் வந்து வாக்களித்த வி.கே.பாண்டியன்

சிம்பிளாக வந்த BJP தலைவர் வி.கே.பாண்டியன

 

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில்,  7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்று 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 

சுமார் 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுகின்றனர்.  11.13 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், ஹரியானவைச் சேர்ந்த 10 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 1 தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 4 தொகுதிகள், டெல்லியைச் சேர்ந்த 7 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மற்றும் மேற்குவங்கத்தச் சேர்ந்த 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கி உள்ளது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த, அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மொத்தமாக வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram