Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!
2026 ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் என்று அண்ணாமலை கூறிவரும் நிலையில், அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று அடித்துச் சொல்லி இருக்கிறார் பாஜகவைச் சேர்ந்த விஜயதரணி. இதன் மூலம் அவர் பாஜகவில் இருந்து விலகி விஜயின் தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் தன்னை இணைந்துக்கொண்டார்.
பாஜகவில் இணைந்து பல மாதங்கள் ஆகிய நிலையிலும் அவருக்கு எந்தவொரு முக்கிய பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. பாஜகவின் உறுப்பினராகத்தான் அவர் அக்கட்சியில் தொடர்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.எல்.ஏ பதவியும் இல்லாமல் பாஜகவிலும் எந்தவொரு பொறுப்பும் இல்லாமலும் அவர் தவித்து வருதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் தான் 2026ல் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சூளுரைத்து வரும் நிலையில், விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்று விஜயதரணி ஒரு குண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக விஜயதரணி கூறுகையில்,”விஜய்யை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் சில அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. விஜய் வரும் தேர்தலில் சரியான கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கலாம்.
அப்படி கூட்டணி அமைக்க முடியாவிட்டால் வாக்குகளை பிரிக்கும் பல கட்சிகளில் ஒன்றாகவே தவெக இருக்கும் . 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் பல முனை போட்டியாக இருக்கும்”என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சுக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் எந்த பொறுப்பும் கொடுக்காமல் இருப்பதால் கடும் மன வருத்தத்தில் இருக்கும் விஜய தரணி 2026 சட்டமன்ற தேர்தலுக்கும் பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.