Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்  நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக தலைவர் விஜய் ஆளுநர் ரவியை சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. அதேபோல், தேசிய மகளிர் ஆணையமும் இந்த வழக்கை கையில் எடுத்திருக்கிறது. 

முன்னதாக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஞானசேகருனுக்கு கடும் தண்டனை வழங்குவதோடு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டார்.  இந்த நிலையில் தான் தமிழக பெண்களுக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதினார் அதில், எல்லா சூழல்களிலும் நிச்சயமாக நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் அரணாகவும் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாத்ததை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மூன்று பக்கங்களிளான மூன்று கோரிக்கைகள் கொண்ட கடிதத்தை அளித்துள்ளார்.அதாவது , அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் முழு பிண்ணனி குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு சீர்குலைவை சரி செய்ய வேண்டும் , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிதியுதவி முழுமையாக வழங்க வேண்டும் என்று மூன்று கோரிக்கைகள் கொண்ட  கடிதத்தை அளித்துள்ளார். ஆளு நருடனான இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நடைபெற்றது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola