Vijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN
சினிமாவில் மட்டுமல்ல, ரியலிலும் பிரகாஷ் ராஜை விஜய்க்கு வில்லனாக்கும் வகையில் சைலெண்ட்டாக ஒரு திட்டத்தை திமுக தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படி விஜயகாந்தை டாக்கல் செய்ய, அவருடன் நெருக்கமாக இருந்த வடிவேலுவை திமுக பயண்படுத்தியதோ, அதே போன்று பிரகாஷ் ராஜ் களமிறங்க உள்ளதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் தேர்தல் களம் தற்போதே சூடுப்பிடிக்க தொடங்கியிருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்குவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பே என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது.
விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள நிலையில், அங்கிருந்து விஜய்யின் அரசியல் பயணம் டேக் ஆப் ஆகும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. விஜய் அரசியல் களத்திற்கு வந்தால், நாளை உதயநிதிக்கு அது கடுமையான போட்டியை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்துள்ள திமுக தற்போதே விஜய்க்கு எதிரான வியூகத்தை வகுக்க தொடங்கியிருப்பதாக தெரிகிறது.
விஜய் அரசியலுக்கு வருவதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக வெளியே சொல்லி வந்தாலும், விஜய் தேர்தலில் போட்டியிட்டால் ஏதோ ஒரு வகையில் திமுகவிற்கு சேதாரம் ஏற்படும் என்று நினைக்கிறது திமுக. ஏனென்றால், ஆளுங்கட்சி எதுவும் செய்யவில்லை ஒரு மாற்றத்தை தனக்கு கொடுங்கள் என்றுதான் விஜய் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழல் அரசியல் களத்தில் இருக்கும். அப்படியிருக்கும் நிலையில், சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவான விஜய் எது பேசினாலும் அது மக்கள் மத்தியில் ஒரு சின்ன அதிர்வையாவது ஏற்படுத்தும் என்பதை திமுக அறிந்து வைத்துள்ளது.
அதனால் விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும், தீவிரமாக உற்றுநோக்கும் திமுக, விஜய்க்கு எதிரான வியூகத்தை தொடக்கத்திலேயே வகுத்து, அவர் சினிமாவில் மட்டும்தான் ஹீரோ, அரசியலில் ஜீரோ என்பதை காட்ட திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவோடு இணக்கமாக இருந்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து விஜயை விமர்சிக்க திமுக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவும் சரி, பிரகாஷ் ராஜும் சரி பாஜக எதிர்ப்பு என்ற கொள்கையில் கருத்தியல் ரீதியாக எதிர்க்கின்றனர். அண்மையில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளிலும் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவும், குறிப்பாக நடிகர் விஜய்யை டார்கெட் செய்து பிரகாஷ்ராஜை களத்தில் இறக்கிவிட திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி, கடந்த கால தேர்தல்களில் விஜய்காந்துக்கு எதிராக நடிகர் வடிவேலுவை பிரச்சாரத்தில் இறக்கிய திமுக. இப்போது, விஜய் சார்ந்த அதே திரைத்துறையினரை வைத்து பிரச்சாரத்தில் அவரை விமர்சித்து நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
அதிலும் நடிகர் விஜய்யுடன் திரைப்படங்களில் பணியாற்றி அவரை பற்றி நன்கு தெரிந்த நபர்கள், விஜயோடு கருத்து மோதல்கள் ஏற்பட்ட பிரபலங்கள் உள்ளிட்டோரை தேர்தல் நெருக்கும் நேரத்திலேயே களத்தில் இறக்கவிட திமுகவின் ஒரு தரப்பு பட்டியலை தயார் செய்து வருகிறது.
வரும் 27ஆம் தேதி விஜய் தன்னுடைய முதல் கட்சி மாநாட்டை நடத்தவிருக்கும் நிலையில், அதற்குள் திரைத்துறையில் இருந்து விஜய்க்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கும் என கூறப்படுகிறது. விஜயின் திரைத்துறை செயல்பாட்டை விமர்சித்து அதே துறையை சேர்ந்த பலர் வெளிப்படையாக பேசவுள்ளதாகவும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.