Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?

Continues below advertisement

மழையில் நிணைந்த தவெக மாநாடு திடலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ட்ராக்டர் மூலம் மழைநீரை வெளியேற்றி நிலத்தை தயார் செய்யும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநாடு குறித்த தேதியில் நடப்பெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் தொடர்ந்து மாநாடு திடலில் சிக்கல் மேல் சிக்கல் ஏற்ப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல்  அரசியல் மாநாடு வருகிற  27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில்  நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஏற்கெனவே நேற்று முன்தினம் மாநாடு திடலுக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மாநில மரமாக அறிவிக்கப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பனைமரத்தை பந்தல் போடும் நபர்கள் அகற்றினர்., இன்று அனுமதியில்லாமல் கோவிலுக்குள் கட்சிக்கொடியை எடுத்து சென்றது என அடுத்தடுத்தது தவெகவினரால் விஜய்க்கு தினந்தோறும் புது தலைவலியை கொடுத்து வருகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் மாநாட்டு திடலுக்குள்   செய்தி எடுக்க  சென்ற செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல்   பவுன்சர்களை வைத்து யாரையும் மிரட்டும் தொணியில் பேசியது சர்ச்சையானது.

மாநாட்டு திடலுக்குள் செய்தியாளர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. திடலுக்கு முன்பாக தடுப்புகள் அமைக்கப்பட்டு தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் திடலை பார்வையிட வரும் அனைவரையும் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் வெளியூர்களில் இருந்து மாநாட்டுப் பணிகளை பார்வையிட வந்த கட்சியினர், பொதுமக்கள், செய்தியாளர்கள் என அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் மாநாட்டுத் திடலுக்கு அடுத்துள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியவில்லை என்கிற புகார் எழுந்த நிலையில் சம்பவ இடத்தில் விக்கிரவாண்டி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புகளை அகற்றினர். 

மாநாடு நடைபெறும் காலம், வடகிழக்குப் பருவமழைக் காலம்.அதிக மழை பொழிந்து வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாநாட்டுக்கு வருபவர்களால் வாகனங்களை சரிவர நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநாட்டு தொடருக்கு முன்பாக தேங்கியுள்ள மழை நீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றி நிலத்தை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram